
யின் | யாங் |
---|---|
இரவு | பகல் |
நிலவு | சூரியன் |
கருப்பு | வெள்ளை |
பெண் | ஆண் |
நோய் | ஆரோக்கியம் |
மனம் | உருவம் |
நல்லது | கெட்டது |
மகிழ்ச்சி | துக்கம் |
உயிர் | உடல் |
குளுமை | உஷ்ணம் |
மென்மை | கடினம் |
யின் யாங் உதாரணங்கள். யின் யாங் தத்துவத்தை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம். மனித வாழ்க்கையில் இன்பமும், ஆரோக்கியமும், நிறைந்து மகிழ்ச்சியாக வாழ்வதும், சில வேளைகளில் துன்பமும் நோய்களும் இடையூறு செய்வதும் இயல்பு. ஆரோக்கியமாக இருப்பவர்கள் நோய்வாய்ப் படுவதும். நோய்வாய்ப் பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவதும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்தான். இன்பமும் துன்பமும் சுழற்சியாக வருவதுதான் மனித வாழ்க்கை என்பதைப் புரிந்து கொண்டு. இன்பத்திலும் துன்பத்திலும் மனிதர்களுக்குத் தேவையான பாடமும் அனுபவமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல ஆற்றல்கள் எங்கும் நிறைந்திருப்பதைப் போன்றே தீய ஆற்றல்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டையும் புரிந்துக் கொண்டு சமப்படுத்தி வாழ்வதே சிறப்பான வாழ்க்கையாகும். மனித வாழ்க்கையில் யின்னும் யாங்கும் அல்லது நல்லதும் கெட்டதும் மாறி மாறி வருவதுதான் இயல்பு. எந்த ஒரு அனுபவத்திலும் நன்மையும் தீமையும் கலந்து இருப்பதுதான் இயல்பு.
இதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும். குறிப்பாக வாழ்க்கையையும் வாழ்க்கையில் நடப்பனவற்றையும் புரிந்துக் கொண்டு வாழவேண்டும்.