
உசுய் ரெய்கி பாரம்பரியத்தில், அதன் நிறுவனர் மிகவோ உசுய் அவர்கள் தனது மாணவர்களுக்கு சில வாழ்க்கை நெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளார், அவை:
ஆங்கிலத்தில்
Just for today.
Do not anger.
Do not worry and be filled with gratitude.
Devote yourself to your work.
Be kind to people.
தமிழில்
இன்று மட்டும்.
கோபம் கொள்ளாதே.
கவலைக் கொள்ளாதே.
இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்.
உன் வேலையில் உன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்.
மனிதர்களுடன் கனிவாக நடந்துக் கொள்.
மனிதர்கள் பொதுவாக, தன்னிடம் இல்லாததை எண்ணி ஏங்குவதனால்தான் பெரும் கவலை கொள்கிறார்கள். மற்ற மனிதர்களுடன் போட்டியும், பொறாமையும், கர்வமும், கொள்ளும்போது தான் மன நிம்மதியை இழக்கிறார்கள். அவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறிகள் தான் இவை.