
உண்மையான நோய்களும், காரணங்களும். உடலில் ஏதாவது தொந்தரவு உருவானால், சிலர் அந்த தொந்தரவை நினைத்துப் பயந்துக் கொண்டிருப்பார்கள். அந்த தொந்தரவு எதனால் உருவானது என்று சிந்திக்காமல், அதை எவ்வாறு சரி செய்வது என்பதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கும். இந்த மனப்பான்மையை அவர்களுக்கு பலவகையான தொந்தரவுகளை உருவாக்கிவிடுகிறது. ஒரு நோய் உருவாகக் காரணமாக இருப்பனவற்றைச் சரி செய்யாமல் நோயை எவ்வாறு குணப்படுத்த முடியும்?
1. கண் நோய்கள், பார்வைக் கோளாறுகளுக்கும், கண் கட்டிகளுக்கும், கண்கள் காரணம் இல்லை.
2. சளி, மூக்கடைப்பு, சைனஸ், மூச்சிரைப்புக்கும் மூக்கு காரணம் இல்லை.
3. காது வலி, காது அடைப்பு, காதுகளில் அரிப்பு, கேட்கும் திறன் குறைவுக்கும் காது காரணம் இல்லை.
4. வாய், நாக்கு, உதடு புண்ணுக்கும், வாய் துர்நாற்றத்திற்கும், காரணம் வாயோ, நாக்கோ அல்ல.
5. தோல் நோய், புண், வெண்குஷ்டம், ஒவ்வாமை, அரிப்புகள், முடி கொட்டுதல், மற்றும் பொடுகுக்குக் காரணம் தோல் அல்ல.
தொந்தரவுகள் தோன்றும் இடத்தில் தான் உண்மையான நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. மேலே குறிப்பிட்டுள்ள தொந்தரவுகள் நோய்கள் அல்ல மாறாக நோயின் அல்லது உடல் பாதிப்பின் அறிகுறிகள். இதனால் தான் என்ன வைத்தியம் செய்தாலும், இந்த நோய்கள் குணமாவதில்லை. உடலில் காணும் நோயின் அறிகுறிகள் என்பவை ஒரு மரத்தின் கிளைகளைப் போன்றவை, அதே நேரத்தில் நோயின் காரணி என்பது அந்த மரத்தின் வேரைப் போன்றது. கிளைகளை வெட்டுவதால் எந்த பயனுமில்லை, மரத்தின் வேரைக் கண்டறிந்து அதை அழித்தால் மரம் தானாகச் சாய்ந்துவிடும்.
உடலின் அறிகுறிகள் கூறும் உண்மையான நோயைக் கண்டறிந்து மருத்துவம் செய்தால் ஒழிய, உடல் உபாதைகள் எந்த காலத்திலும் தீராது. ஒரு நோயின் மூல காரணத்தை அறிந்துகொள்ளாமல் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது.