
உள்ளங்கைகளின் மூலமாக ஆற்றலை உணர்தல். மனிதர்களின் உள்ளங்கைகள் பிரபஞ்ச ஆற்றலைக் கிரகிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் தன்மையுடையவை. எந்தவொரு கருவியும் இல்லாமல், உள்ளங்கைகளை மட்டுமே பயன்படுத்தி அனைவராலும் ஹீலிங், கிளின்சிங், மற்றும் ஸ்கெனிங் செய்திட முடியும். மனிதர்கள் பல்வேறு தன்மைகள் கொண்டவர்கள், அதனால் ஸ்கெனிங் செய்திடும் போது ஒவ்வொரு தனிநபர் உணரும் உணர்வும் வெவ்வேறாக இருக்கும்.
கைகளைப் பயன்படுத்தி இயற்கை, மனிதர்கள், இடங்கள், பொருட்கள், படங்கள், போன்றவற்றில் இருக்கும் ஆற்றலை ஸ்கெனிங் செய்திடும் போது, உஷ்ணம், குளுமை, அரிப்பு, அதிர்வு, துடிப்பு, குத்தல், போன்று பல்வேறு தன்மைகளில் ஆற்றல் உணரப்படும்.
எந்த வகையிலும் உங்களால் ஆற்றலை உணர முடியவில்லை என்றால் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சை கவனித்துவிட்டு, அல்லது தியானம் செய்துவிட்டு பின்னர் ஸ்கேன் செய்து பாருங்கள். முதல் முயற்சியில் ஆற்றலை உணர முடியாவிட்டால் வருத்தப்படத் தேவையில்லை, சில காலப் பயிற்சிகளுக்குப் பிறகு நிச்சயமாக உங்களால் ஆற்றலை கைகளில் உணர முடியும்.