
உடலில் கழிவுகள் சேர்வதாலும், உடலின் ஆற்றல் குறைவதாலும், உடலிலும் மனதிலும் நோய்களும் பாதிப்புகளும் உருவாகின்றன. பல வேளைகளில் உடலில் உண்டாகும் பலவீனங்கள் மனதைப் பாதிக்கின்றன, மனதில் உண்டாகும் பலவீனங்கள் உடலைப் பாதிக்கின்றன.
தனக்குத் தானே சுயமாக ரெய்கி சிகிச்சை செய்துகொள்ளும் போது, உடலில் ஆற்றல் சீரடைகிறது, மன ஓர்மையும் உண்டாகிறது. இவற்றின் காரணமாக உடல் மற்றும் மனதின் இயக்கங்கள் சீரடைகின்றன. உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகள் வெளியேறுகின்றன. உடலின் நோய்களும் பாதிப்புகளும் குணமாக தொடங்குகின்றன.
வாரம் ஒருமுறை, இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, தனக்குத் தானே ஹீலிங் செய்துகொள்ளும் போது, உடல் மற்றும் மனதின் இயக்கமும் ஆரோக்கியமும் மேம்படுகின்றன. சுயச் சிகிச்சை செய்துகொள்ளும் வழிமுறைகள்.
1. சுயச் சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக, குறைந்தது 15 நிமிடங்கள் தியானத்தில் இருக்க வேண்டும்.
2. சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாக இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் உதவியைக் கோர வேண்டும்.
3. தரையில் ஆசனமிட்டு இயல்பாக அமர்ந்து கொள்ளலாம், அல்லது நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம், அல்லது கட்டிலில் தளர்வாக படுத்துக் கொள்ளலாம்.
4. சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாக, சில நிமிடங்கள் தளர்வாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.
5. உச்சத்தலையில் தொடங்கி கால் பாதங்கள் வரையில் ஆற்றலையும், ஆராவையும் சுத்தம் செய்ய வேண்டும் (cleansing).
6. உச்சந்தலை, உள்ளங்கைகள் அல்லது எண்ணத்தின் (மனம்) மூலமாக ரெய்கி ஆற்றலை உடலுக்குள் கிரகிக்க வேண்டும்.
7. உடலுக்குள் நுழையும் ஆற்றலைக் கவனிக்க வேண்டும்.
8. இரு உள்ளங்கைகளையும் பயன்படுத்தி உச்சத்தலையில் தொடங்கி கால் பாதங்கள் வரையில் ஒவ்வொரு உறுப்பாக தொட்டு சக்தியூட்ட வேண்டும்.
9. உடல் உறுப்புகளின் ஆற்றல் தேவைகளைக் கவனித்து ஆற்றலை வழங்க வேண்டும்.
10. உட்புகும் ஆற்றல் குறையும் போது சிகிச்சை முடிந்துவிட்டது என்று உணர்ந்து கொள்ளலாம்.
11. சிகிச்சைக்குப் பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி செலுத்த வேண்டும்.
ரெய்கி சிகிச்சையின் மூலமாக அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தலாம். உடல், மனம், ஆற்றல், ஆரா, அமானுஷ்யம் என அனைத்து வகையான தொந்தரவுகளையும் குணப்படுத்திக் கொள்ளலாம். தினம் தியானம் செய்யும் போது அனைத்து வகையான குறைகளும் நீங்கி எல்லா நலங்களும் வளங்களும் உங்களை வந்தடையும்.

(ரெய்கியின் மூலமாக சுயமாக சிகிச்சை செய்துகொள்ளும் வழிமுறைகள்)