
ரெய்கியை பயன்படுத்தி குணப்படுத்த. ஒரு நபருக்கு ரெய்கி சிகிச்சை வழங்குவதற்கு முன்பாக, சிகிச்சை வழங்குபவர், என்ன செய்யப் போகிறார்? எவ்வாறு சிகிச்சை நடைபெறப் போகிறது? என்பனவற்றை சிகிச்சை வழங்குபவர் சிகிச்சை பெறுபவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.
என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அரைகுறையாக சிகிச்சை பெற்றுக் கொள்வதை விடவும், எனக்கு இவ்வாறு தான் சிகிச்சை வழங்கப்படப் போகிறது, அந்த சிகிச்சை இவ்வாறான பலன்களை வழங்கும் என்ற புரிதலுடன் சிகிச்சை பெற்றுக் கொள்வது மேலும் விரைவான சிறந்த பலனை வழங்கும்.
ரெய்கியை பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள்
1. ஹீலர், சிகிச்சை பெறுபவருடன் பேசி, அவரின் தேவையையும், பிரச்சனையையும், நோயின் மூல காரணத்தையும் முதலில் கண்டறிய வேண்டும்.
2. ரெய்கி சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பாக, ஹீலர் சிகிச்சை பற்றிய சிறிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்.
3. நோயாளியின் தொந்தரவுகள், பேய், பிசாசு, செய்வினை, சூனியம், மந்திரங்கள், போன்றவற்றால் உண்டாகியிருந்தால் level 1, 2, 3 தீட்சை பெற்றவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது.
4. நோயாளியை தொட வேண்டிய அவசியம் உண்டானால், தொடுவதற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும்.
5. சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாக, அவருக்குப் பூரணமான ஆரோக்கியம் திரும்ப வேண்டும் என்று மனதாலே பிரார்த்தனை செய்ய வேண்டும்.
6. தொட்டோ, தொடாமலோ, முத்திரைகள் மூலமாகவோ, பயிற்சி வகுப்பில் கற்றுக் கொடுத்த வழிமுறையில், அவருக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.
7. தொந்தரவுகள் நீங்கும், நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
8. உணவு, நீர், உறக்கம், ஓய்வு, மன அமைதி, என ஐந்தையும் பேண அறிவுறுத்த வேண்டும்.
9. நோயாளியின் இரகசியங்களை பாதுகாத்திடுங்கள். அவரின் பெயரையோ, அடையாளங்களையோ, தொந்தரவையோ வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது.
10. சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக இறைவன், இயற்கை மற்றும் ரெய்கியிடம் அனுமதியும் உதவியும் கோரவேண்டும்.
11. சிகிச்சைக்குப் பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி செலுத்த வேண்டும்.