
உடல் சிகிச்சை – 2
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 5. இந்த சுய-சிகிச்சை, ஒரு சுய பிரகடனம். இந்த சுய பிரகடனத்தை உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உங்கள் மனதுக்குள் கூறிக் கொள்ளுங்கள். உங்கள் செவிகளுக்கு விளங்குமாறு சத்தமாக உச்சரிப்பது நல்ல பயனைத் தரும்.
தியான நிலையில் அமர்ந்து கொண்டு, அல்லது அமைதியாக படுத்துக்கொண்டு சுவாசத்தின் மூலமாக பிராண சக்தியையும், உச்சந்தலையின் மூலமாக பிரபஞ்ச சக்தியையும் கிரகித்து, உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு உறுப்புக்கும் அனுப்ப வேண்டும். அவை அந்த உறுப்புகளை பலப்படுத்துவதையும் அவற்றின் இயக்கத்தை சீர் செய்வதையும் கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு வரியையும் தற்போது உங்களுக்கு நடந்துக் கொண்டிருப்பதைப் போன்று உணர்ந்து உச்சரிக்க வேண்டும். உச்சரிக்கும் ஒவ்வொரு உறுப்பின் மீதும் உங்களின் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். முழு உணர்வுடன் உங்கள் உடல், மனம், ஆற்றல் மற்றும் உயிர் நிலையில் மாற்றம் உண்டாவதை உணர வேண்டும்.
★ எனது இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், வயிறு, மற்றும் உள்ளுறுப்புகள் அனைத்தும் அவற்றின் கழிவுகளை நீக்கி முழு ஆரோக்கியத்துடன் சிறப்பாக இயங்குகின்றன.
★ என் உடலின் சக்தி ஓட்டம், நாடி ஓட்டம், ரத்த ஓட்டம், சுவாச ஓட்டம், மற்றும் மற்ற இயக்கங்கள் அனைத்தும் முறையாகவும் முழுமையாகவும் நடைபெறுகின்றன.
★ என் உடலின் எலும்புகள், மூட்டுகள், நரம்புகள், தசைகள், சதைகள், மற்றும் தோலின் இயக்கங்கள் அனைத்தும் முழு ஆரோக்கியத்துடன் சிறப்பாக இயங்குகின்றன.
★ நான் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும், தைரியமாகவும், முழு பலத்துடனும், இருக்கிறேன்.
★ என் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் முழுமையாகப் பெற்று நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறேன்.
எனக்கு நிம்மதியான திருப்திகரமான வாழ்க்கையை அருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி, இயற்கைக்கு நன்றி, என் தாய் தந்தையருக்கு நன்றி, எல்லா குருமார்களுக்கும் நன்றி, என் முன்னோர்களுக்கு நன்றி, எல்லா தெய்வங்களுக்கும் நன்றி, நன்றி நன்றி நன்றி.
உடலும் மனமும் தன்னை சீர் செய்து கொள்ள வாய்ப்பளித்து. சுவாசத்தையும் உச்சந்தலையையும் கவனித்தவாறு ஐந்து நிமிடங்கள் அமைதியாக தியான நிலையில் அமர்ந்திருக்கவும். அல்லது அமைதியாக சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கவும்.