ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 4

உடல் சிகிச்சை – 1

தளர்வு நிலையில், அமைதியாக அமர்ந்துக்கொண்டு அல்லது படுத்துக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். உங்கள் உடலுக்குள் பரவும் பிரபஞ்ச ஆற்றல் ஒளி பொருந்திய வெள்ளை அல்லது நீல நிறத்தில் இருப்பதை போன்று கற்பனை செய்து கொள்ள வேண்டும். மின் விளக்கின் வெளிச்சத்தை ஒத்த பிரகாசத்துடன் மின்னிக்கொண்டு பிரபஞ்ச பேராற்றல் உச்சந்தலையின் மூலமாகவும் சுவாசத்தின் மூலமாகவும் உங்கள் உடலுக்குள் புகுவதைப் போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உடலின் உறுப்புகளை குறிப்பிடும் போது, உங்கள் கைகளை குறிப்பிடும் உறுப்புகளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளின் மூலமாக பிரபஞ்ச பேராற்றல் நீங்கள் தொடும் உறுப்புக்குப் பாய்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

★ எனது முகம், கண்கள், மற்றும் மூக்கு ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது வாய், பற்கள், மற்றும் நாக்கு ஆரோக்கியமாக
இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது காதுகள் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது தலை, தலைமுடி, மற்றும் மூளை ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது நெற்றியும், சிந்தனையும், நினைவாற்றலும், ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது பின் மூளையும், பிடரியும் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது முதுகு தண்டும், கழுத்தும் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது உணவுக்குழாய், சுவாசக்குழாய், மற்றும் சுவாசம், ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது இருதயம், இரத்த உற்பத்தி, மற்றும் இரத்த ஓட்டம், ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது கல்லீரல், மற்றும் உடலின் கழிவு நீக்கம் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது நுரையீரல், மற்றும் சுவாசம் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது மண்ணீரல், மற்றும் ஜீரண உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது சிறுநீரகங்கள், மற்றும் அவற்றின் கழிவு நீக்கங்கள்
ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது முதுகெலும்பு, மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது வயிறும் ஜீரணமும் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது சிறுகுடல், மற்றும் உடலின் சத்து விநியோகம் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது பெருங்குடல், மற்றும் கழிவு நீக்கம் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது சிறுநீர்ப்பை, மற்றும் நீர் கழிவு நீக்கம், ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

பெண்களுக்கு மட்டும்
★ எனது பெண்மை மற்றும் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இயங்குகின்றது, தனது கடமைகளை சரியாக செய்கின்றது.

ஆண்களுக்கு மட்டும்
★ எனது ஆண்மை மற்றும் ஆண்மை வீரியம் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது கைகள், மற்றும் கை மூட்டுகள் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது கை விரல்கள் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது கால்கள், மற்றும் கால் மூட்டுகள் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

★ எனது கால் விரல்கள் ஆரோக்கியமாக இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் என் முழு
உடலும், உடல் உறுப்புகளும், மனமும் ஆரோக்கியத்துடன் இயங்குகின்றன, அவற்றின் கடமைகளை முறையாக செய்கின்றன. நான் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.

பிறந்த நாள் முதலாக நான் வாழ்வதற்கு உதவியாக இருக்கும் இந்த உடலுக்கு நன்றி. சீரான ஆரோக்கியமான உடலின் இயக்கத்துக்கு நன்றி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

“உடலும் மனமும் தன்னை சீர் செய்து கொள்ள வாய்ப்பளித்து. சுவாசத்தையும் உச்சந்தலையையும் கவனித்தவாறு ஐந்து நிமிடங்கள் அமைதியாக தியான நிலையில் அமர்ந்திருக்கவும். அல்லது அமைதியாக சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கவும். இரவு நேரமாக இருந்தால் படுக்கைக்கு செல்லவும்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X