Holisticrays

Master Raja Mohamed Kassim

The Founder of Holistic Reiki, Raja Mohamed Kassim, is a multi-faceted and multi-talented personality. An avid reader and thinker right from an early age, he started his inquisitive journey to find the purpose of his birth on this planet. His reasoning, logical, and analytical mind-frame never allowed him to accept just the stated facts. Instead, he starts exploring the real cause and effect behind every single action and reaction in human life.

He began by exploring conventional Indian and Islamic philosophies. Additionally, engaging in meditation, Usui Reiki, Kundalini Reiki, aura cleansing, and chakra healing, and participating in religious and spiritual activities. He practices acupuncture as well.

He creates a holistic approach to human life by integrating Reiki with other spiritual disciplines and techniques. His healing techniques restore people’s energy, vitality, and health while offering thorough treatment and remedies for a variety of human afflictions, diseases, and difficulties. He assists anyone who seeks his advice and support in addressing the imbalances and obstructions they are experiencing.

His revolutionary outlook, coupled with his innovative ideologies, made him come up with his paradigm of Holistic Reiki, which is undoubtedly a breakthrough in the Reiki world. Being an eloquent and emphatic motivational speaker and consultant to the greatest degree, he has been instrumental in bringing about a positive transformation in the lives of many.

He started to speak about his ideology through his writings and continued with his YouTube videos. He is a knowledgeable, intelligent author, writer, and blogger and has brought about a transformational shift in the perceptions of his followers about health, spirituality, motivation, and leading a peaceful life.

His far-sighted and futuristic vision has resulted in trust in his websites, which will serve as a one-stop solution for all Reiki-related topics. All of his contributions will work to bring much-needed comfort to everyone who sincerely seeks comprehensive abundance in life.

மாஸ்டர் ராஜா முகமது காசிம்

ஹோலிஸ்டிக் ரெய்கியின் நிறுவனர் ராஜா முகமது காசிம் அவர்கள், ஒரு பன்திறன் மற்றும் பன்முகம் கொண்ட ஆளுமையாவார். இறைவன், இயற்கை, படைப்புகள், மற்றும் மனித வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் இளம் வயது முதலாக தீவிரமான தேடுதலில் இறங்கினார்.

அவரது பகுத்தறிவும், தர்க்க அறிவும், ஆராயும் தன்மையும், காலம் காலமாக கூறப்பட்டுவரும் மற்றும் நம்பிக்கையோடு பின்பற்றப்பட்டு வரும் விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. மாறாக, காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், மத நம்பிக்கைகளையும், புராணக் கதைகளையும், ஏன்? எதற்கு? எதனால்? எப்படி? என்று கேள்விகளைக் கேட்டு அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆராயத் தொடங்கினார்.

இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து, சைவம், பௌத்தம், ஜைனம், மற்றும் சீக்கிய மத நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஆராய்ந்தார். குண்டலினி ரெய்கி, உசுய் ரெய்கி, மற்றும் அக்குபஞ்சர் கலைகளில் தேர்ச்சிப் பெற்றார். பிரபஞ்சத்தின் இயக்கம், பிரபஞ்ச ஆற்றலின் தன்மை, கர்மா, விதி, ஜோசியம், எண் கணிதம், உலகத்தின் இயக்கம், சமுதாய அமைப்பு, போன்றவற்றை ஆராய்ந்தார். மனிதர்களின் பிறப்பு, இறப்பு, உடல், மனம், ஆரா, சக்ரா, போன்றவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அவற்றின் இயக்கத்தையும் தன்மைகளையும் ஆராய்ந்தார். அவற்றின் மூலம் அவரை நாடி வருபவர்களின் வாழ்க்கை, உறவுகள், உடல், மனம், பொருளாதாரம், போன்றவற்றில் உள்ள சிக்கல்களை களைய உதவுகிறார்.

அவரது பகுப்பாய்வு கண்ணோட்டமும், புதுமையான சிந்தனையும், ரெய்கி கலையில் சில புதுமைகளைச் செய்யத் தூண்டின. இதன் விளைவாக ரெய்கியுடன் உடலியல், மனம், கர்மா, போன்றவற்றை இணைத்து ஹோலிஸ்டிக் ரெய்கி என்ற புதிய ரெய்கி சிகிச்சை முறையை உருவாக்கினார். இது எவ்வித சந்தேகமுமின்றி ரெய்கி உலகில் ஒரு பெரிய திருப்புமுனையாகும்.

மேலும் இவர் ஒரு தன்முனைப்பு பேச்சாளர் மற்றும் ஆலோசகர். இவரது ஆலோசனைகள் பலரின் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்துள்ளன. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு காலகட்டத்தையும், ஒவ்வொரு அம்சத்தையும் தனி தனியாகப் பார்க்காமல், முழுமையாக, ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பார்க்க வேண்டும் என்பது இவரது சித்தாந்தமாகும்.

தொடக்கத்தில் தனது எழுத்துக்களின் மூலமாக தனது சித்தாந்தத்தை பேசத் தொடங்கினார். பின்பு தனது கருத்துக்களை யூடியூப் வீடியோக்களின் மூலமாக வெளிப்படுத்தினார். ஆரோக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், தன்முனைப்பு, வாழ்வியல் முறைகள், பிரபஞ்சம், போன்றவற்றில் தனது மாறுபட்ட சிந்தனைகளை, தன் எழுத்துக்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக வெளிப்படுத்தினார்.

அவரது தொலைநோக்குப் பார்வை rmtamil.com, reikitamil.com, holisticrays.com, suvarnabumi.com, மற்றும் பல இணையதளங்களை உருவாக்கத் தூண்டியது. இணையதளங்கள், Facebook, Telegram மற்றும் WhatsApp குழுக்களின் மூலமாக அவரது கருத்துக்கள் பலருக்கும் பயனளித்துக் கொண்டிருக்கின்றன.

Shopping cart
There are no products in the cart!
0
X