Holisticrays

மாஸ்டர் ராஜா முகமது காசிம்
ரெய்கி மாஸ்டர்

ஹோலிஸ்டிக் ரெய்கியின் நிறுவனர் ராஜா முகமது காசிம் அவர்கள், ஒரு பன்திறன் மற்றும் பன்முகம் கொண்ட ஆளுமையாவார். உலக படைப்பு மற்றும் மனித பிறப்பின் நோக்கங்களை கண்டறியும் நோக்கத்துடன் சிறு வயதிலிருந்தே தீவிரமாக வாசிக்க தொடங்கினார். அவரது பகுத்தறிவும், தர்க்க அறிவும், பகுப்பாய்வு தன்மையும், காலம் காலமாக கூறப்பட்டுவரும் மற்றும் நம்பிக்கையோடு பின்பற்றப்பட்டு வரும் விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. மாறாக, காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், மத நம்பிக்கைகளையும், புராணக் கதைகளையும், ஏன்? எதற்கு? எதனால்? எப்படி? என்று கேள்விகளைக் கேட்டு அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆராயத் தொடங்கினார்.

இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து, சைவம், பௌத்தம், சமணம், மற்றும் சீக்கிய மத நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஆராய்ந்தார். குண்டலினி ரெய்கி, உசுய் ரெய்கி, மற்றும் அக்குபங்சர் கலைகளில் தேர்ச்சிப் பெற்றார். பிரபஞ்சத்தின் இயக்கம், பிரபஞ்ச ஆற்றலின் தன்மை, கர்மா, விதி, ஜாதகம், ஜோசியம், எண் கணிதம், உலகத்தின் இயக்கம் போன்றவற்றை ஆராய்ந்தார். மனிதர்களின் பிறப்பு, இறப்பு, உடல், மனம், ஆரா, சக்ரா, போன்றவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அவற்றின் இயக்கத்தையும் தன்மைகளையும் ஆராய்ந்தார். அவற்றின் மூலம் அவரை நாடி வருபவர்களின் வாழ்க்கை, உறவுகள், உடல், மனம், போன்றவற்றில் உள்ள சிக்கல்களை களைய உதவுகிறார்.

அவரது பகுத்தாய்வு கண்ணோட்டமும், புதுமையான சித்தாந்தங்களும், ரெய்கியில் சில புதுமைகளைச் செய்யத் தூண்டின. இதன் விளைவாக ரெய்கியுடன் உடலியல், மனம், கர்மா, போன்றவற்றை இணைத்து ஹோலிஸ்டிக் ரெய்கி என்ற புதிய ரெய்கி சிகிச்சை முறையை உருவாக்கினார். இது எவ்வித சந்தேகமுமின்றி ரெய்கி உலகில் ஒரு பெரிய திருப்புமுனையாகும். மேலும் இவர் ஒரு தன்முனைப்பு பேச்சாளர் மற்றும் ஆலோசகர். இவரது ஆலோசனைகள் பலரின் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்துள்ளன.

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு காலகட்டத்தையும், ஒவ்வொரு அம்சத்தையும் தனி தனியாகப் பார்க்காமல், முழுமையாக, ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பார்க்க வேண்டும் என்பது இவரது சித்தாந்தமாகும். தொடக்கத்தில் தனது எழுத்துக்களின் மூலமாக தனது சித்தாந்தத்தைப் பேசத் தொடங்கினார். பின்பு தனது கருத்துக்களை யூடியூப் வீடியோக்களின் மூலமாக வெளிப்படுத்தினார். ஆரோக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், தன்முனைப்பு, வாழ்க்கை முறைகள், பிரபஞ்சம், போன்றவற்றில் தனது மாறுபட்ட சிந்தனைகளை, தன் எழுத்துக்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக வெளிப்படுத்தினார்.

அவரது தொலைநோக்குப் பார்வை rmtamil.com, reikitamil.com, holisticrays.com, suvarnabumi.com, மற்றும் பல இணையதளங்களை உருவாக்கத் தூண்டியது. இணையதளங்கள், Facebook, Telegram மற்றும் WhatsApp குழுக்களின் மூலமாக அவரது கருத்துக்கள் பலருக்கும் பயனளித்துக் கொண்டிருக்கின்றன.

 

Leave a Reply

Shopping cart
There are no products in the cart!
0