Holisticrays

ஹோலிஸ்டிக் ரெய்கி
ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி என்பது பாரம்பரிய ரெய்கியின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஹோலிஸ்டிக் என்ற வார்த்தைக்கு முழுமை அல்லது முழுமையானது என்று பொருளாகும். மனித வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் சூழ்நிலைகளையும் உள்ளடக்கிய புரிதலாக இருப்பதனால் ஹோலிஸ்டிக் ரெய்கி என்று அழைக்கப்படுகிறது.

ஹோலிஸ்டிக் ரெய்கி மனிதர்களின் வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், முழுமையான வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும். ஹோலிஸ்டிக் ரெய்கி, ஆற்றல், உடல், மனம், புத்தி, அலைகள், அதிர்வுகள், ஆத்மா, ஆன்மீகம், உலக வாழ்க்கை என பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மனித வாழ்க்கைக்கான முழுமையான புரிதலையும் பெற உதவும்.

ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்
மிகவோ உசுய் அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறிகளை சற்று திருத்தம் செய்து ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறியாக வகுத்துள்ளோம். காரணம் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யும் பொழுது மிகவோ உசுய் அவர்கள் கூறிய கருத்துக்கள் சற்று மாற்றம் அடைந்திருக்கலாம். அதனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சிறிய மாற்றங்களை செய்துள்ளேன்.

ஆங்கிலத்தில்
From today
Do not anger
Do not worry
Be filled with gratitude
Devote yourself to your duty
Be kind to all life

தமிழில்
இன்று முதல்
கோபம் கொள்ளாதே
கவலைக்கொள்ளாதே,
நன்றி உணர்வோடு இரு
உன் கடமையை முழுமையாக செய்
அனைத்து உயிர்களிடமும் இரக்கம் காட்டு

 

Leave a Reply

Shopping cart
There are no products in the cart!
0