வணக்கம் ராஜா சார், இறைவன் அருள் எங்களுக்கு முழுமையாக இருக்கிறது ஆதலால் தான் உங்களை போன்று ஒரு குரு எங்களுக்கு கிடைத்துள்ளார், அதற்கு முதலில் இறைவனுக்கு கோடி நன்றிகள். நான் கௌரி மேடம் நடத்திய பாத குசா சிகிச்சைமுறை பயிற்சியில் கலந்து கொண்டேன் , மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்கள் எங்களுக்கு மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் இந்த பயிற்சி முறையை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இந்த பயிற்சி முறையை ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான எளிமையான ஒரு பயிற்சி. மிக்க நன்றி கௌரி மேடம். – Sujatha.J – Kanchipuram

அனைவருக்கும் வணக்கம்🙏🏻

கடந்த இரண்டு நாட்களாக (02.10.21 & 03.10.21) ஆன்லைனில் ராஜா அய்யா அவர்கள் மூலம் கௌரி மேடம் எடுத்த வகுப்பில் நான் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய புதிய தகவல்களை கற்று கொண்டேன். மேடம் அனைத்து புள்ளிகளையும் நோய் குறியுடன் மிகவும் தெளிவாக விளக்கம் அளித்தார்கள். அப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்றும் வீடியோ மூலம் காண்பித்தது மிகவும் நன்றாக புரியும்படி இருந்தது. எங்களுக்காக reference material அனைத்தும் ராஜா அய்யா அவர்கள் தயாரித்து அளித்தார்கள். அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அந்த நேரத்தில் foot reflexology பற்றி முழு விளக்கமும் அய்யா அவர்கள் அளித்தார். அதனோடு இந்த வகுப்பை நாங்களும் பயிற்சி செய்ய ஆசியும் வழங்கியது எங்களை இன்னும் ஊக்குவிக்கும்படி இருந்தது. அதற்கு மிக்க நன்றி அய்யா🙏 இதில் சேர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் குல தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻,💐🙇🏼‍♀️ – Sangeetha – UAE

கௌரி அவர்களுடைய பாத சிகிச்சை வகுப்பு மிகவும் அருமையாகவும், தெளிவான விளக்கத்துடன் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.. – Subhashini – Bareilly

Clear and detailed explanation and useful class for a healthy life. – Jameela Beevi Thameem – Dindigul

 

X