
சோ-கு ரேய் சின்னத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள். சோ-கு ரேய் சின்னத்தை இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். முதலில் பிரபஞ்ச ஆற்றலை ஒன்று திரட்டுவதற்கும், கிரகிப்பதற்கும், அனுப்புவதற்கும், முதல் படத்தில் உள்ளதைப் போன்று வரைய வேண்டும். அடுத்ததாக பிரபஞ்ச ஆற்றலை வெளியேற்றுவதற்கும் ஆற்றலைக் குறைப்பதற்கும் இரண்டாவது படத்தில் உள்ளதைப் போன்று வரைய வேண்டும்.
1. சிகிச்சை வழங்குபவர் சிகிச்சை பெறும் நபர் மீதோ, சிகிச்சை தேவைப்படும் உடலின் உறுப்பு மீதோ சின்னத்தை, வலது கையின் ஆள்காட்டி விரலால் வரையலாம்.
2. சிகிச்சை வழங்குபவர் அவரின் இரு உள்ளங்கைகளிலும், தேவையான சின்னத்தை தனது ஆள்காட்டி விரலால் வரைந்து கொள்ள வேண்டும். பின்னர் இரு உள்ளங்கைகளையும் சிகிச்சை தேவைப்படும் நபரை நோக்கியோ, இடத்தை நோக்கியோ, பொருளை நோக்கியோ காட்டலாம்.
3. நெடுந்தூரச் சிகிச்சை அளிப்பதற்கு இந்த சின்னத்தை காற்றில் வரைந்து அனுப்பலாம்.
4. புகைப்படம் மாற்றும் கடிதத்தின் மீதும் வலது கையின் ஆள்காட்டி விரலால் இந்த சின்னத்தை வரையலாம்.
5. ஒரு காகிதத்தில் தேவைகளை எழுதி, அவற்றின் மீதும் வலது கையின் ஆள்காட்டி விரலால் இந்த சின்னத்தை வரையலாம்.
6. மேலும் உங்களின் கற்பனைக்கும் தேவைக்கும் ஏற்ப வரைந்தும் பயன்படுத்தலாம்.
ஆற்றல் குறைபாட்டால் தொந்தரவுகள் உருவாகும் போது முதல் சின்னத்தையும். ஆற்றல் அதிகமாகி தொந்தரவுகள் உருவானால் இரண்டாவது சின்னத்தையும் பயன்படுத்தலாம். இந்த சின்னங்களை வரைய, படங்களில் எண்களின் வழிகாட்டுதலின்படி 1 என்ற எண்ணில் தொடங்கி 5 என்ற எண்ணில் முடிய வேண்டும்.

சோ-கு ரேய் (Cho-Ku Rei)
சின்னம் 1 – உருவாக்க, அதிகரிக்க

சோ-கு ரேய் (Cho-Ku Rei)
சின்னம் 2 – குறைக்க, கட்டுப்படுத்த