ஆரோக்கியமாக வாழ்வோம். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, நோய்களையும் உடலின் உபாதைகளையும் குணப்படுத்தும் மருந்து என்று நம்பி உட்கொண்ட மருந்துகளே உடலின் பாதிப்பை மேலும் மோசமாக்கி; உடலில் பல புதிய தொந்தரவுகளையும் வலி வேதனைகளையும் உயிர்க்கொல்லி நோய்களையும் உருவாக்கிவரும் இன்றைய கால கட்டத்தில்; நாமும் நமது குடும்பத்தாரும் வாழ்நாள் முழுமைக்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, உடலைப் பற்றிய புரிதலும், வீட்டு மருத்துவமும், இயற்கை மருத்துவமும் ஒவ்வொரு நபரும் கையில் ஏந்த வேண்டிய தற்காப்பு ஆயுதங்களாகும்.

நோயென்றால் என்னவென்றே அறியாமல், வாழ்நாளின் இறுதிக் காலம் வரையில் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த ஒரு பரம்பரையைச் சார்ந்த நமது இன்றைய நிலை என்ன? ஊரில் ஒருவர் நோயாளி என்ற நிலையிலிருந்து வீட்டுக்கு ஒருவர் நோயாளி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மனிதர்கள் நோயில்லாமல் வாழ்வது சாத்தியமில்லை என்று நம்ப வைக்கப்பட்டுள்ளோம். வீட்டின் சமையல்கட்டில் கிடைக்கும் சாதாரண உணவுப் பொருட்களைக் கொண்டு உடல் உபாதைகளைப் போக்கிக் கொண்டிருந்த நாம், மருந்து மாத்திரைகள் இல்லாமல் நோய்கள் குணமாகமாட்டா என்று நம்ப வைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய காலகட்டத்திலும் நமது கிராமப்புறங்களில், மருத்துவர்களின் உதவி இல்லாமல் வீட்டிலேயே குழந்தைகள் சுகப்பிரசவமாகப் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் படித்த வளர்ச்சி அடைந்த சமுதாயமாக கருதிக்கொண்டு பலர் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுப்பதை பிரசவமாக நம்புகிறார்கள். அனைத்துக்கும் மேலாக உடலை அறுப்பதும் உடலின் உறுப்புகளை நீக்குவதும் மருத்துவம் என்று நம்பும் அளவுக்கு நமது உடலைப் பற்றிய அறிவையும் மருத்துவ அறிவையும் இழந்துள்ளோம். எந்த ஒரு தடுப்பூசியும் சத்து மாத்திரைகளும் இல்லாமல், வீட்டிலேயே பத்துப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்த நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளைக் கவனிக்காமல் அலட்சியம் செய்துவிட்டு, நோய்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலை மாற வேண்டும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற பல இயற்கை மருத்துவ நூல்கள் எளிதில் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது. நம்பகமான இயற்கை மருத்துவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளை வாசித்துப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். நமது சரியான வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மருத்துவ அறிவையும், நமது பிள்ளைகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் கற்றுத்தர வேண்டும். ஆரோக்கியமாக வாழப் பழகிக் கொண்டால், நோய்களைக் கண்டு அஞ்சத் தேவையிருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X