ஆராவையும் ஆற்றலையும் சீர்கெடுக்க கூடிய விசயங்கள். மனிதர்களின் உடலில் உண்டாகும் ஆற்றல் பற்றாக் குறையினாலும், நோய்களின் காரணமாகவும், தவறான மனிதர்களின் பழக்க வழக்கங்களினாலும், தவறான செயல்களைச் செய்வதினாலும், தவறான இடங்களுக்குச் செல்வதானாலும், ஆராவில் பலகீனமும், குறைபாடுகளும், பாதிப்புகளும் உண்டாகலாம். ஒரு சிலருக்கு ஆராவில் துளைகள் கூட உருவாகலாம். பலகீனமான மனிதர்களுக்கு ஆற்றல் குறைவினாலும், ஆராவின் பலகீனத்தினாலும், தீய ஆற்றல்கள், தீய அலைகள், தீய எண்ணங்கள், மற்றும் துர் ஆத்மாக்கள், உடலுக்குள் நுழைய வழிவகுக்கலாம்.

இவை அந்த மனிதனின் வாழ்க்கையில் சில பல பாதிப்புகளையும், துன்பங்களையும், வேதனைகளையும், நோய்களையும், உண்டாக்கலாம். மனிதர்களின் ஒவ்வொரு, தவறான பழக்க வழக்கங்களும், தவறான வாழ்க்கை முறைகளும், அவர்களின் ஆராவையும் ஆற்றலையும் சீரழிக்கக் கூடும். அதைப்போன்றே மனிதர்கள் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு நல்ல பழக்க வழக்கமும், சரியான வாழ்க்கை முறையும், அவர்களின் ஆவாரைச் சீர்படுத்தும் பலப்படுத்தும்.

 

ஆராவையும் ஆற்றலையும் சீர்கெடுக்க கூடிய விசயங்கள்

1. உடலுக்கு ஒத்துக்கொள்ளாத மற்றும் எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகள் மற்றும் பானங்கள்.

2. அதிகப்படியான அசதி, சோர்வு, தூக்கமின்மை.

3. வாழ்க்கையில் விரக்தி அல்லது மன அழுத்தம்.

4. பயம், கவலை, சோகம், போட்டி, பொறாமை, திமிர், கர்வம் போன்ற உணர்வுகள்.

5. உடலின் ஆரோக்கியக் குறைபாடுகள்.

6. தவறான புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்.

7. தவறான மனிதர்களின் உறவும் நட்பும்.

8. தூய்மையற்ற ஒழுக்கக் கேடான விசயங்கள் நடக்கும் இடங்கள்.

9. தவறான பழக்க வழக்கங்கள்.

ஆரோக்கியமற்ற ஆராக்களின்
உதாரணம்

ஆரோக்கியமற்ற ஆராக்களின்
உதாரணம்

ஆரோக்கியமான ஆராவின்
உதாரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X