ரெய்கி

நோய்களை முழுமையாக குணப்படுத்த

நோய்களை முழுமையாக குணப்படுத்த. ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால், அந்த நோய் ஏன்? எங்கே? எவ்வாறு? எதனால்? என்ன நோக்கத்திற்காக? உருவானது என்பதைக் கண்டறிய வேண்டும். நோயின் மூல வேரைக் கண்டறியாமல் ஒரு சிறு புண்ணைக் கூட யாராலும் குணப்படுத்த முடியாது.

இதற்கு உதாரணம் ஆங்கில மருத்துவர்கள், சர்க்கரை நோயாளியின் காலில் புண் உண்டானால் அதனைக் குணப்படுத்த முடியாமல் பெரும்பாலும் புண் உண்டான பகுதியை வெட்டிவிட ஆலோசனை கூறுவார்கள். ஆனால் அதே காலில் வெட்டப்படுவதினால் உண்டாகும் காயம் ஒரு சில மாதங்களில் ஆற்றிவிடுகிறது. மருத்துவர் உண்டாக்கிய காயம் குணமாகும் போது, சர்க்கரை நோயினால் சுயமாக உருவான புண் எதனால் குணப்படுத்த முடிவதில்லை என்பதை பெரும்பாலும் யாரும் சிந்திப்பதும், ஆராய்வதும் கிடையாது.

எடுத்துக்காட்டாக: ஒருவருக்கு வயிறு வலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த வயிற்று வலியை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த வயிற்று வலி எங்கே? ஏன்? எதனால்? உருவானது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதை விட்டு விட்டு வயிறு வலித்தால், இதைச் சாப்பிட வேண்டும் அல்லது அந்த மருந்தைச் சாப்பிட வேண்டும் என்று தொடங்கினால். அந்த வலி தற்காலிகமாக குறையலாம். ஆனால் அந்த வலி மீண்டும் வரக்கூடும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் வலி மாறக்கூடும், புதிய தொந்தரவுகள் வேறு வடிவிலும் உருவாகலாம் அல்லது சாதாரண வலியாக இருந்தது கொடிய நோயாகவும் மாறலாம்.

உடலில் வலிகள் உண்டாக பல காரணங்கள் உள்ளன. வலிக்கும் பகுதியில் சக்தி குறைவாக இருக்கலாம், உடலில் கழிவின் தேக்கம் அதிகமாக இருக்கலாம், அந்த வலி ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம், மன அழுத்தமாக இருக்கலாம், அல்லது மனதில் உண்டான கவலை, பயம், துக்கம், போன்றவை வலிகள் உண்டாக காரணங்களாக இருக்கலாம். உடலில் ஏதாவது ஒரு தொந்தரவு உண்டானால் அந்த தொந்தரவின் மூலத்தைக் கண்டறியாமல் எவ்வாறு மருத்துவர்கள் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்?

ஒரு இயந்திரம், கணினி, அல்லது ஆய்வுக் கூடத்தின் அறிக்கைகளைக் கொண்டு அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியுமா? நிச்சயமாக யாராலும் முடியாது. இதனால்தான் இயந்திரங்களின் உதவியினால் கண்டறியப்படும் எந்த நோயும் குணமாவதில்லை. ஒரு இயந்திரம் (மெஷின்) என்பது பதிவு செய்யப்பட்டவற்றை மீண்டும் கூறுமே ஒழிய அதற்கு எந்த அறிவும் கிடையாது. இயந்திரம் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

மனப் பாதிப்புகளினால், உடலில் உருவாகும் நோய்களையும், சக்தி தட்டுப்பாட்டால் உடலில் உருவாகும் நோய்களையும் கண்டறியக் கூடிய இயந்திரம் இதுவரையில் கிடையாது. ஒரு நோயாளியுடன் அமர்ந்து அவருடன் நேரம் செலவழித்து, பொறுமையாகவும் விரிவாகவும் பேசினால் ஒழிய உண்மையான நோயின் மூலக் காரணத்தை எந்த மருத்துவரால் கண்டறிய முடியாது.

உடலின் ஒரு பகுதியில் வலி என்று ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவர் வலி தெரியாமல் இருக்க மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார். அந்த மாத்திரைகள் வலியைக் குணப்படுத்திவிடுமா? அல்லது வலியை மறைக்க மட்டும் உதவுமா? நிச்சயமாக அந்த மாத்திரைகள் வலியைக் குணப்படுத்துவது கிடையாது மாறாக அந்த மாத்திரைகள் நோயாளி தன் வலியை உணராமல் இருக்க உணர்வு மண்டலங்களைக் கட்டுப்படுத்துகின்றன, போதை மாத்திரைகளைப் போன்று செயல்படுகின்றன.

வலியை உருவாக்கிய நோயும், பாதிப்படைந்த உறுப்பும், சரியான மருத்துவம் செய்யாததால் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன, பாதிப்புகளும் நோய்களும் பெரிதாகின்றன. இதனால்தான் தற்கால மருத்துவத்தில் பெரும்பாலான நோயாளிகள் நோய்கள் குணமாகாமலும், நோய்கள் மோசமாகியும் மரணிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X